2022 அக்டோபர் மாதம் மாநில அளவில் , 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு நடைபெற்றது . அதில் திருவாரூர் வ. சோ.ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி சார்ந்த S.முகமது யூசப் (X1 - A1) என்ற மாணவர் 82 மதிப்பெண்கள் எடுத்து திருவாரூர் மாவட்டம் அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ .1500/- வீதம் இரண்டாண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. வெற்றி பெற்ற இம்மாணவரை பள்ளிச்செயலாளர் முனைவர் மா.வை.பாலசுப்ரமணியன், பள்ளித் தலைமையாசிரியர் திரு தி.தியாகராஜன் மற்றும் ஆசிரியர்கள் , அலுவலர்கள் பாராட்டினர் .